குழந்தைகள் தின விழாவை சிறப்பிக்கும் வகையில் சிவகிரி விவேகானந்தா யோகா அகாடமி, திரு. வி. க. கல்வி அறக்கட்டளை மற்றும் யோகா ஆசிரியர்கள் இணைந்து நடத்திய இரண்டாவது மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான யோகாசனப் போட்டிகள் சிவகிரி, அம்மன் கோவில் அருகில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடையே யோகாசனம் பற்றி சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் கொடுமுடி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment