குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மொடக்குறிச்சி கணபதி பாளையத்தில் அறம் அறக்கட்டளை மற்றும் CK மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாமை மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி கே சரஸ்வதி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
மேலும் நிகழ்வில் ஈரோடு பாஜக தெற்கு மாவட்ட தலைவர் V. C வேதனந்தம், அறம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் திருமதி கிருத்திகா சிவ்குமார், பாஜக மாநில விவசாய அணி சிறப்பு அழைப்பாளர் மற்றும் திட்ட பொறுப்பாளர் பாலகுமார், டாக்டர் பிரியதர்ஷினி மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழும், பரிசுகளும், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்கள்.

No comments:
Post a Comment