குழந்தைகள் தின விழாவை சிறப்பிக்கும் வகையில் கணபதிபாளையம் GRK மஹாலில் அறம் அறக்கட்டளை மற்றும் CK மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி துவக்கி வைத்தார் நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் திரு. V. C. வேதனந்தம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

நிகழ்வில் CK மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் இயக்குனரும் தி இந்தியன் பப்ளிக் பள்ளியின் தாளாளருமான டாக்டர். ஷிவ்குமார் சின்னசாமி, அறம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கிருத்திகா சிவ்குமார், பாஜக மாநில விவசாய அணி சிறப்பு அழைப்பாளர் மற்றும் திட்ட பொறுப்பாளர் பாலகுமார், மூத்த நிர்வாகி காந்தி, எஸ். எம். ஆர். ரமேஷ், ராமநாதன், டாக்டர் பிரியதர்ஷினி மற்றும் பள்ளி ஆசிரிய பெருமக்கள், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நடைபெற்ற முகாமில் 150 குழந்தைகள் மருத்துவ ஆலோசனை பெற்றனர். விளையாட்டுப் போட்டிகளில் 300 குழந்தைகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கி பாராட்டினார்
No comments:
Post a Comment