மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா போட்டி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 November 2022

மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா போட்டி.


தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவிகளின் கலைத்திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாகவும் பள்ளிக்கல்வியின் செயல்பாடுகள் ஒரு பகுதியாக கலைப் பண்பாடுகளைக் கொண்டாட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரின் செயல்முறை ஆலோசனையின் படி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சாரா செயல்பாடுகள் 2022-23 ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் வட்டாரம் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைத் திருவிழா நடைபெற்று வருகின்றன.

இதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் கலை இசை நாடகம் நடனம் மேடைப்பேச்சு  போன்ற 84 போட்டிகளில் 463 மாணவிகள் பங்கு பெற்றுள்ளனர், நிகழ்ச்சியில் வெற்றி பெறும் மாணவிகள் மொடக்குறிச்சி வட்டார அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.


இந்நிகழ்ச்சியை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனிச்சாமி குத்துவிளக்கு  ஏற்றி தொடங்கி வைத்தார் பொருளாளர் குழந்தைசாமி வாழ்த்துரை வழங்கினார் பள்ளித் தலைமை ஆசிரியர் லலிதா அனைவரையும் வரவேற்றார் கலைத்துறை சேர்ந்தவர்களை நடுவராக பங்கேற்று உள்ளனர் இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


-  மொடக்குறிச்சி செய்தியாளர் சக்திவேல். ப

 

No comments:

Post a Comment