ஈரோடு மாவட்டம் வனக்கோட்டம் அந்தியூர் வட்டம் பர்கூர் வனச்சரகம், தாமரைக்கரை பிரிவு, தாமரைக்கரை காப்புக்காடு, தாமரைக்கரை காவல் சுற்று, வனப்பகுதியில் இருந்து வெளிவந்த ஆண் புள்ளி மான் ஒன்று (சுமார் வயது 4) கிணற்றுக்குள் தவறி விழுந்ததை தகவல் பெற்ற வனத்துறைஅதிகாரி மற்றும் வனப்பணியாளர்கள் ஆகியோர் விரைந்து சென்று புள்ளி மானை வலை கொண்டு காப்பாற்றி சரக அலுவலகம் கொண்டு வந்து பாதுகாப்பாக்க வைக்கப்பட்டது.

மேலும் மானின் உடலில் எந்தவித காயமும் இல்லை என்று மாவட்ட வன அலுவலர் கேள்விப்பட்டவுடன் மாவட்ட வன அறிவுறுத்தலின் படி புள்ளி மான் இயல்பு நிலைக்கு வந்த பின் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்ம மூர்த்தி
No comments:
Post a Comment