நந்தா பொறியியல் கல்லூரியில் மாபெரும் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 November 2022

நந்தா பொறியியல் கல்லூரியில் மாபெரும் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்.


நந்தா பொறியியல் கல்லூரியில் அனைத்து துறைகளின் மாணவர்கள் சங்கம் சார்பில் மூன்று நாட்கள் கொண்ட "SyNECtics22" என்கிற தலைப்பில் மாபெரும் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதனுடைய துவக்க விழாவினை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் தேசிய சங்கத்தின் துணை இயக்குனர் உதயசங்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இக்கருத்தரங்கிற்கு ஸ்ரீ நந்தா அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமையேற்று உரையாற்றுகையில், இக்கருத்தரங்கில் இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளிலிருந்து சுமார் 700 மாணவர்களும் மற்றும் நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளிலிருந்து சுமார் 3390 மாணவர்களும் ஆக மொத்தம் 4000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள போவதாக கூறினார். இவர்கள் தங்களது சுமார் 2000 க்கும் மேற்பட்ட புதிய படைப்புகளை பேராசிரியர்களுடன் இக்கருத்தரங்கின் மூலம் ஆலோசிக்கப்பட உள்ளனர் என்றும் கூறினார்.


தாங்கள் கற்றறிததன் பயனாக தனித்திறன்களை கொண்டு படைக்கப்பட்ட புதிய படைப்புகளை கலந்து ஆலோசித்து, சிறந்த படைப்பு என்கிற வகையில் வெற்றி பெற மாணவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார். முன்னதாக மாணவர்கள் சங்கத்தின் செயலர் மாணவி செல்வி ஆர். மீரா சாம்ருதி, சிறப்பு விருந்தினர், புதிய படைப்பாளர்கள் மற்றும் மாணவர்களை வரவேற்றார். இவ்விழாவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி முனைவர் எஸ்.ஆறுமுகம், கல்லூரியின் முதல்வர் முனைவர் என். ரெங்கராஜன், நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் இயக்குனர் செந்தில் ஜெயவேல் மற்றும் நிர்வாக அலுவலர் ஏ.கே.வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டு புதிய படைப்புகளை சமர்பிக்கும் மாணவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.


இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் துணை இயக்குனர் உதயசங்கர் அவர்கள் சிறப்புரையாற்றுகையில் நிகழ்வின் முடிவில் மாணவர்கள் சங்கத்தின் செயலர் மாணவன் செல்வன் எஸ் தமிழரசு கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment