நடைப்பயணத்திற்கு கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நடைபயணம் அங்கண கவுண்டன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இருந்து செங்கோட்டைநகர் வரை ஊர்வலமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பிரச்சாரம் மேற்கொண்டு செல்லப்பட்டது.

நடை பயணித்தில் ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பழனிச்சாமி, கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோ, கொமராபாளையம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கதிரி, வடிவேலு, ரத்னா, விக்னேஸ்வரி, வசந்தி மற்றும் வளர்ச்சி குழு உறுப்பினர் ராசு, தங்கராஜ், லிங்கராஜ், பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள்,பள்ளி மாணவ, மாணவிகள்,தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள்,மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், திரளாக கலந்து கொண்டனர், இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி செயலாளர் குமார் நன்றி கூறினார்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment