கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் அமைந்த இடத்தை ஆய்வு செய்தார், அமைச்சர் சு.முத்துசாமி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 28 November 2022

கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் அமைந்த இடத்தை ஆய்வு செய்தார், அமைச்சர் சு.முத்துசாமி.


தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் அமைந்த இடத்தை ஆய்வு செய்தார். மாமன்ற உறுப்பினர்களுடன் ஆய்வில் ஈடுபட்டு குடிநீர் அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை துறை சார்ர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை வழங்கினார். (ஈரோடு மாவட்டம், ஈரோடு மாநகராட்சிக்கான தனிக் குடிநீர்த் திட்டம் (அம்ரூத் திட்டம்) ஈரோடு மாநகராட்சிக்கு தனிக்குடிநீர்த் திட்டம் செயல்படுத்துவதற்காக ரூ-484,45 கோடிக்கு அரசாணை எண் 109. நாள் 29.08.2016 ல் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, இத்திட்டம், இடைக்கால் (2032) மக்கள் தொகையின் படி 7.00 இலட்சம் மக்களுக்கு 114,75 மில்லியன் லிட்டர் குடிநீர், மற்றும் உச்சகட்ட (2047) மக்கள் தொகையின்படி 9.05 இலட்சம் மக்களுக்கு 147.69 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.


பவானி நகரிலிருந்து 5 உமீ தொலைவில் உள்ள ஊராட்சிகோட்டை அருகில் உள்ள வரதநல்லூரில் காவிரி ஆற்றில் நீர் சேகரிப்பு கிணறு அமைத்து அதிலிருந்து இயல்பு நீர் எடுக்கப்பட்டு, 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலயத்திற்கு அனுப்பப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர் 52,00 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டியிலிருந்து, 22.80 கி.மீ குழாய் மூலம் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சூரியம்பாளையம் மற்றும் வ.ஊசி பூங்கா ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள 42 இலட்சம் மற்றும் 118 இலட்சம் கொள்ளளவு தரைமட்ட தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.


இவ்விரு தரைமட்ட தொட்டிகளிலிருந்து 79.663 கி.மீ கிளை நீருந்து குழாய் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள 21 மேல் நிலைத் தொட்டிகளுக்கும். நிலையிலுள்ள 46 பழைய மேல் நிலைத் தொட்டிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் 731.82 கி.மீ நீளமுள்ள பயர்மான குழாய்களிலிருந்து 1,05,000 குடிநீர் வீட்டிணைப்புகள் மூலம் குடிநீர் விநியோல்க்கப்படும்.


தற்போது இத்திட்டம் சோதனை ஓட்டத்தில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஈரோடு மாநகராட்சியைச் சார்ந்த மக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 விட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 

No comments:

Post a Comment