மொடக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பாக கலைத்திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி இன்று 29.11.2022 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி 29.11.2022 முதல் 2.12.2022 வரை மொடக்குறிச்சி,அவல் பூந்துறை, எழுமாத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகின்றது. மொடக்குறிச்சியில் நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் வனிதாராணி, சுரேஷ், வட்டார வள மையம் மேற்பார்வையாளர் சுதா, தலைமையாசிரியர்கள் பொன்மொழி, லலிதா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் , மாணவ , மாணவிகள் என ஏராளமான கலந்து கொண்டார்கள் .

No comments:
Post a Comment