தான்தோன்றியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக திருவிழா ஏற்பாடுகளை கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே .ஏ . செங்கோட்டையன் பார்வையிட்டார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 6 November 2022

தான்தோன்றியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக திருவிழா ஏற்பாடுகளை கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே .ஏ . செங்கோட்டையன் பார்வையிட்டார்.

ஈரோடு மாவட்டம்,  கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள மொடச்சூர்  பகுதியில் எழுந்தருளியுள்ள தான்தோன்றியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக திருவிழா ஏற்பாடுகளை  கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர்  கே .ஏ . செங்கோட்டையன் பார்வையிட்டார். 

அப்போது ஏழாயிரம் சதுர அடியில் திருக்கோவிலில் கிரானைட் கற்கள் 11வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஏ.என்.முத்துரமணன்  அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். மேலும் கோவில் கும்பாபிஷேக விழாவில் தீர்த்த குடம் எடுக்கும் பெண்களுக்கு  மஞ்சள் புடவைகள் வழங்கி சிறப்பித்தார். 


இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.கே.காளியப்பன், சத்தியபாமா, கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், கோபி நகராட்சி 11வது வார்டு உறுப்பினர் ஏ.என்.முத்துராமன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் அனைவருக்கும்  அன்னதானம் வழங்கினார்கள். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment