பவானிசாகர் சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் மற்றும் கடை வீதி பகுதிகளில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பெ.சா.சிறுத்தைவள்ளுவன் தலைமையில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்.தம்பிராஜன், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ப.பெரியகாளையன், சத்தியமங்கலம் நகர செயலாளர் சிறுத்தை மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் பொது மக்களுக்கும், பெண்களுக்கும், வியாபாரிகளுக்கும் மனுஸ்மிருதி நூல்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் புலிகள் கட்சி மேற்கு மண்டல நிதிச் செயலாளர் ப.அப்துல்லா கலந்து கொண்டார். உடன் கலந்து கொண்ட விசிக நிர்வாகிகள் விடுதலை,கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் வீர.துரைசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், விடுதலை இயக்க மகளிர் மாவட்ட துணை செயலாளர் கலாமணி, சத்தியமங்கலம் நகர ஒருங்கிணைப்பாளர் சிறுத்தை சுப்பிரமணியன், சத்தியமங்கலம் நகர பொருளாளர் மனோஜ்குமார், சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கொண்டப்பன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment