ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தமிழ் குன்ற குறவன் சமுதாய மக்களின் சார்பாக பல்வேறு கோரிக்கை முன்வைக்க நேரம் ஒதுக்கி தருமாறு குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் தலைமையில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இந்நிகழ்வில் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் K.சந்தோஷ்குமார் மாவட்ட பொறுப்பாளர் ஆறுமுகம் மாநகர மாவட்ட ஆலோசகர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment