ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் சுமார் ரூ.8 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள குரும்பூர்- மாமரத்துபள்ளம் மற்றும் அருகியம் - சர்க்கரைபள்ளம் பகுதியில் உயர் மட்ட தரைப்பாலம் அமைய உள்ளதை அடுத்து பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி .பி.ஏ., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரும், சத்தியமங்கலம் ஒன்றிய குழு உறுப்பினர் என்.எம்.எஸ்.நாச்சிமுத்து, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.மாரப்பன், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி.பிரபாகரன், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.ஆர்.பழனிச்சாமி, வழக்கறிஞர் கே.எஸ்.வெற்றிவேல், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஆர்.சரவணன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜப்பன், கிளை செயலாளர்கள் காளிசாமி, துரைசாமி, தங்கராஜ், அண்ணாமலை, ராஜேந்திரன், கார்த்திக், ரவி, சாமிகண்ணன் ஆகியோர் ஆய்வின் போது உடன் இருந்தனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment