ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியின் தொகுதி சார்ந்த முக்கிய கோரிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கொடுத்தார்கள். கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட முதல்வர் அவர்கள் உடனடியாக மனு மீதான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள்.
நிகழ்வின் போது முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான திரு. நயினார் நாகேந்திரன் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். ஆர். காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.


No comments:
Post a Comment