இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட ஈரோடு தலைமை மீன்வளாகத்தில் ரூபாய் 80.26 கோடி மதிப்பீட்டில் 230/110 கிலோ வளிமகப்பு (Gas insulated switch gear) அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தினை பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியின் புது ஈரோடு மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.பா. செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே. செல்வராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கஸ்தூரி, மின்சார வாரிய தலைமை பொறியாளர் (பொ) இந்திராணி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், கண்காணிப்பு பொறியாளர் சிவப்பிரகாஷ், செயற்பொறியாளர்கள் அருள் அரசு, செல்வி, உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment