ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மலையடிப்புதூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 14, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
6 முதல் 12 வரையிலான வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி, ஓவிய போட்டி, கட்டுரை போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

உடன் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் சகாயராஜ், வார்டு உறுப்பினர் வடிவேலு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment