ஈரோடு மாவட்டம், ஈரோட்டில் இயங்கி வரும் சக்தி மசாலா நிறுவனத்தின் தயாரிப்பான மசாலா பொட்டலங்களில் ஆங்கில எழுத்துக்களும் அதற்கு அடுத்தபடியாக இந்தி எழுத்துக்களும் கடைசியாக நமது தாய் மொழியான தமிழ் எழுத்தை பதிவு செய்யப்பட்ட இருப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநில ஆளுமைக்குழு பொறுப்பாளர் மா.கி.சீதாலட்சுமி மற்றும் ஈரோடு நாடாளுமன்ற பொறுப்பாளர் சே.நவநீதன் , மாநில ஒருங்கிணைப்பாளர் மகளிர் பாசறை மு.சத்யாமுருகேசன் தலைமையில் ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் சக்தி மசாலா நிறுவனத்தில் இது குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதில் தமிழை முதன்மை பதிவாக பதிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் பேரில் நிறுவனத்தின் மேலாளர் கோரிக்கை ஏற்றுக் கொண்டு ஒரு சில மாதங்களில் இதனை சரி செய்து தருகிறேன் என்று உறுதி கூறினார்.
- தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி


No comments:
Post a Comment