சுதந்திர போராளி திப்பு சுல்தான் பிறந்தநாளில் சமூக நல்லிணக்க கருத்தரங்கம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 21 November 2022

சுதந்திர போராளி திப்பு சுல்தான் பிறந்தநாளில் சமூக நல்லிணக்க கருத்தரங்கம்.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் சுதந்திர போராளி திப்பு சுல்தான் பிறந்தநாளில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சார்பில் சமூக நல்லிணக்க கருத்தரங்கம் சத்தி பெரிய பள்ளிவாசல் வீதி விஜயா ஸ்ரீ மஹாலில் நடைபெற்றது. 

மாநில உதவி தலைவர் ப.மாரிமுத்து தலைமை தாங்கினார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு ஹாஜி எஸ்.ஏ.ஜஹாங்கீர் வரவேற்புரையாற்றினார்.மாநில அமைப்பாளர் பேராசிரியர் அருணன் , முனைவர் எஸ்.ஜெயசங்கர் ஆகியோர் கருத்துரை  வழங்கினார்கள்.


சத்தி அஹ்லே தக்னி சுன்னத் ஜமாஅத், தலைவர் ஹாஜி எஸ்.என்.நதிமுல்லாகான், சாஹெப், சத்தி அஹ்லே தக்னி சுன்னத் ஜமாஅத்,  செயலாளர். ஜனாப் எஸ்.ஏ.அஸ்கர்அலி, சத்தி அனைத்து வணிகர் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஏ.சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 


தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.துரைராஜ், எஸ்.ஜமேஷ், சிறுபான்மை  மக்கள் நலக் குழு மாவட்ட தலைவர் ஹாஜி.கே.எஸ்.இஸாரத்தலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மற்றும் மாவட்ட உதவி தலைவர் டி.சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் கே.நடராஜன், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.அம்மணி அம்மாள், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.பி.ராஜு, எஸ்.ஏ.ராமதாஸ், ஜனாப்.எம்.ஜாகீர்உசேன், ஒருங்கிணைப்பாளர் ஜனாப்.ஏ.ஹாத்திம்தாய் நன்றியுரையாற்றினார். முடிவில் வினாடி வினா போட்டியில் பங்கேற்ற மாணவ,  மாணவிகளுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment