ஈரோடு மாவட்டம், சித்தோடு டெக்ஸ் வேலியில் டேலன்ட்ஸ் ஆப் தமிழ்நாடு என்கிற இலக்கியப் போட்டி மற்றும் கலாச்சார விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E.திருமகன் ஈவெரா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை கூறினார்.

ஈரோடு மாநகர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் ஆரிப் விழா ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் T.திருச்செல்வம், மாவட்ட துணை தலைவர் B.ராஜேஷ் ராஜப்பா, மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் R.விஜயபாஸ்கர், மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜயகண்ணா, ஈரோடு நகர காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குப்பண்ணா சந்துரு, சிவா, டிட்டோ, ஈரோடு மாநகர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் துணை தலைவர் முத்துராஜ், தம்பி கார்த்தி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment