இந்திய ஃப்ளோர் பால் ஃபெடரேஷன் சாம்பியன்ஷிப் போட்டி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 November 2022

இந்திய ஃப்ளோர் பால் ஃபெடரேஷன் சாம்பியன்ஷிப் போட்டி.


தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் சென்னை நடத்திய தேசிய 16வது இந்திய ஃப்ளோர் பால் ஃபெடரேஷன் சாம்பியன்ஷிப் போட்டி 29.10.2022 முதல் 31.10.2022 வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது. 

இந்தப் போட்டியை தமிழ்நாடு ஃப்ளோர் பால் அசோசியேஷன் நடத்தியது.  இதில் இந்தியா முழுவதிலும் இருந்து மாணவ, மாணவியர் கலந்து கொண்டதோடு, தமிழக அணி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 15 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 


12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆத்விக் அணி முதலிடமும், 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பிரிவில் தீபக், திவித், சாஷ்வி, சுதர்சன், சுஜித் ஆகியோர் முதலிடமும் பெற்றனர்.  இரண்டாம் இடத்தை குகசரவணன், ஸ்ரீராம் பிரிதிவ், பெனியல்ஜோஷ், சுதன், ரகுல் ஆகியோர் பெற்றுள்ளனர், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஹெப்சிபா, தீபிகா, அவந்திகா ஆகியோர் மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.


இந்நிகழ்ச்சியில் பி,தேவகாந்தன்.எம்.பில்., உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குனர்.மாவட்ட ஃப்ளோர்பால் சங்க செயலாளர் மற்றும் ஸ்வஸ்திஹா சாதனையாளர் விளையாட்டு அகாடமி இயக்குனர் நன்றி, ஈரோடு மாவட்ட ஃப்ளோர்பால் சங்கத்தின் மாண்புமிகு அருண் நாகலிங்கம் தலைவர், மணிகண்டன் துணை தலைவர், அய்யப்பன் இணை செயலாளர், ஸ்ரீதேவி செந்தில் குமார், பொருளாளர், பிரியதர்ஷினி இணைச் செயலாளர், அருண் பாலாஜி இணைச் செயலாளர் ஈரோடு சட்டக் கல்லூரி, Dr.SANDHI CSI பெண்கள் ஈரோடு இயற்பியல் இயக்குநர், செல்வராஜ் தலைவர் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

No comments:

Post a Comment