ஈரோட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் ஆவணப்படம் ஈரோடு ஆனூர் திரையரங்கத்தில் வெளியீட்டு விழா நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 November 2022

ஈரோட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் ஆவணப்படம் ஈரோடு ஆனூர் திரையரங்கத்தில் வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம்,  ஈரோட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் ஆவணப்படம்  ஈரோடு ஆனூர் திரையரங்கத்தில் வெளியீட்டு விழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் .ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, மதிமுக தலைமை கழக செயலாளர் .துரை வைகோ ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.

ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, திமுக துணை பொதுச்செயலாளரும்,  நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E.திருமகன் ஈவெரா கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளார் T.திருச்செல்வம், மாவட்ட துணை தலைவர் B.ராஜேஷ் ராஜப்பா, ஈரோடு மாநகர் திமுக செயலாளர் மு.சுப்பிரமணியம், ஈரோடு மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் நா.முருகன், மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.வந்தியதேவன், ஈரோடு மாவட்ட சி.பி.எம். செயலாளர் ஆர்.ரகுராமன், ஈரோடு மாநகர் மாவட்ட சி.பி.ஐ செயலாளர் த.பிரபாகரன்,  கொ.ம.தே.கட்சி மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, ஈரோடு மாநகர் கொ.ம.தே.கட்சி செயலாளர் கொங்கு.A.கோவிந்தராஜ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் எம்.முகம்மது ஆரிப், மனித நேய மக்கள் கட்சி செயலாளர் சலீம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றம் கழகம் சித்திக், திராவிடர் கழகம் மண்டலத் தலைவர் த.சண்முகம், திராவிடர் விடுதலை கழகம் ப.ரத்தினசாமி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெ.குமரகுருபரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment