ஈரோடு மாவட்டம் கல்யாணசுந்தரம் சாலையில் உள்ள.சி.எஸ்.ஐ. நிறுவனம் கடந்த பல வருடங்களாக 12.66 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தனர்... இதைத் தொடர்ந்து ஈரோட்டில் ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கம் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க பல போராட்டங்களை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்தனர்.

இந்நிலையில்.சி.எஸ்.ஐ ஆக்கிரமித்துள்ள 12.66 ஏக்கர் நிலம் அரசு நிலம் தான் என உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி 80அடி சாலையை திறக்க இருந்த தடையை நீக்கியது. இந்நிலையில் இன்று ஸ்ரீ பெரிய மாரியம்மன்க்கு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நிலமிப்பு இயக்கம் துணைத் தலைவர் திரு. கைலாசபதி அவர்களது தலைமையில் ஸ்ரீ பெரிய மாரியம்மன் பூஜை நடைபெற்றது இப் பூஜையில் ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment