ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சிக்கரசம்பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அருள்மிகு ஶ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் மருத்துவ மையம் திறப்பு விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.இ.ஆ.ப. தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள் சத்தியமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ, சத்தியமங்கலம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ், சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், சத்தி திமுக நகர செயலாளர் ஆர்.ஜானகி ராமசாமி, அறங்காவலர் குழு தலைவர் புருஷோத்தமன், சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், சத்தியமங்கலம் வட்டாட்சியர் ரவிசங்கர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment