ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட உரிமையியல் தலைவர் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் V. லோகநாதன் B. Sc., L. L. B அவர்கள் தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் பள்ளி மாணவிகளுக்கு அடிப்படை சட்டங்கள், போக்சோ சட்டங்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒழிப்பது தொடர்பான சட்ட விழிப்புணர்வு பற்றி தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இம்முகாமில் இலவச சட்ட உதவி வழக்குரைஞர்கள் திருமதி.K. மகேஸ்வரி, திரு.P. சுரேஷ் குமார், திருமதி.K.சசி, மற்றும் அரசு மருத்துவர் திருமதி. கண்மணி ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் 700 மாணவியர்கள், தலைமை ஆசிரியை, மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்.

No comments:
Post a Comment