ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஆதித்தமிழர் பேரவை ஈரோடு வடக்கு மாவட்டத்தின் சார்பில் அறிவுழக ஆசான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் இந்த நினைவு நாளில் சத்தியமங்கலம் சமத்துவபுரம் புதுவடவள்ளியில் அமைந்துள்ளது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை நிமிர்த்தம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொ.குமுதா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பெ.பொன்னுசாமி கலந்துகொண்டு மாலை அணிவித்தார்.
இந்த நிகழ்வில் மகளிர் அணி நிர்வாகிகள் ரா.அமுதா, மா.கலைவணி, பெ.நித்யா, சீ.அம்பிகா, மற்றும் மகளிர் அணி சார்பில் திரளான பெண்கள் கலந்து கொண்டார்கள்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.


No comments:
Post a Comment