ஈரோடு மாவட்டம் தூ.நா.பாளையம் ஊராட்சி ஒன்றியம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் 45 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூ.நா.பாளையம் ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலம் தழுவிய பெண்கள் கபாடி போட்டிக்கு வருகை தந்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி விழா சிறப்புரை ஆற்றி, வீரர்கணைகளை ஊக்குவித்தார்.

மேலும் இவ்விழாவில் ஈரோடு வடக்கு திமுக மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், ஈரோடு வடக்கு மாவட்ட துணை செயலாளர் கீதா நடராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாச்சலம், முன்னாள் சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.சுப்பிரமணியம், தூ.நா.பாளையம் திமுக ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment