நம்பியூரில் தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நலவாரியத்தின் உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 December 2022

நம்பியூரில் தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நலவாரியத்தின் உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.


ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், நம்பியூரில் தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நலவாரியத்தின் உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முருகேசன் தலைமை தாங்கினார். நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும் , நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் ப.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். 

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் தமிழ்நாடு பனைமரதொழிலாளர்கள் நலவாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு பனைமர தொழிலாளிகளுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை , நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் இவ்விழாவில் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்.விஸ்வநாதன் கலந்து கொண்டு பனை தொழில் செய்கின்ற தொழிலாளருக்கு பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்து பேசினார். 


மேலும் அந்த கோரிக்கைகள் பனைமர நலவாரிய தலைவரிடம் கொடுத்து நிறைவேற்ற கோரிக்கை விடுத்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பனை வாரியம் பெருந்துறை சங்கர் குமார் சிறப்பான முறையில் செய்திருந்தார். இவ்விழாவில் கொங்கு மண்டல செயலாளர் எம்.கே.டி.கோவிந்தராஜ் நாடார், மகாஜன சங்கம் மாவட்ட செயலாளர் வரதராஜ் நாடார், வீர குணாளன் நாடார் பேரவை தலைவர் ஈஸ்வரன் நாடார், காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் பூமி நாதன் நாடார், பனங்காட்டு படை கட்சி அமைப்பு செயலாளர் இம்மானுவேல் நாடார், கொங்கு மண்டல நாடார் உறவின் முறை சங்கத்தின் தலைவர் சாமிநாத நாடார், சேலம் பிரேம் நாடார், டைகர் மூர்த்தி நாடார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment