ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமராபாளையம் ஊராட்சியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் வடிகால் மற்றும் கான்கிரீட் ரோடு 15 வது நிதி குழு மானியம் பணி நிறைவடைந்து உள்ளதை சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ நேரில் பார்வையிட்டார்.

உடன் கிளை செயலாளர் சோமு கவுண்டர், கிளைச் செயலாளர் தர்மராஜ், முன்னாள் ஊராட்சி செயலாளர் சுரேஷ், மாவட்ட பிரதிநிதி ரமேஷ், இளைஞர் அணி அமைப்பாளர் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி


No comments:
Post a Comment