ஈரோடு மாவட்டம், பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் எஸ்.கே.விக்னேஸ்வரன் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் ப.க.பழனிசாமி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சு.குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர் (மேற்கு) ராஜா (எ) ஆசை தம்பி, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், நெசவாளர் அணி ஒன்றிய அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.



No comments:
Post a Comment