உலக எய்ட்ஸ் தினத்தினை அனுசரிக்கும் வகையில் மாபெரும் சிறப்பு இரத்த தானம் முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 December 2022

உலக எய்ட்ஸ் தினத்தினை அனுசரிக்கும் வகையில் மாபெரும் சிறப்பு இரத்த தானம் முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மாக்கினாங்கோம்பை ஊராட்சியில்  உலக எய்ட்ஸ் தினத்தினை அனுசரிக்கும் வகையில் அரசூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மாபெரும் சிறப்பு இரத்த தானம் முகாம் நடைபெற்றது. 


இந்த முகாமினை கேர் - தொடர்பு பணியாளர் திட்டம், மாக்கினாங்கோம்பை ஊராட்சி, இரத்த வங்கி - அரசு மாவட தலைமை மருத்துவமனை, ஈரோடு இணைந்து நடத்தியது.

இந்த முகாமினை கேர் - தொடர்பு பணியாளர் மாவட்ட திட்ட வள அலுவலர் அழகு ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். முகாமினை சத்தியமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர்  கே.சி.பி.இளங்கோ,  மாக்கினாங்கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு ஈஸ்வரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். மேலும் இந்த முகாமில் சமூக ஆர்வலர் அம்மு பூபதி, ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் இராஜம்மாள், ஈரோடு மாவட்ட தலைமை மருத்துவர் ரவிச்சந்திரன்,  முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் விஸ்வநாதன்,  திமுக ஒன்றிய துணை செயலாளர் அசோகன், ஊராட்சி பணியாளர் விஸ்வநாதன் திமுக நிர்வாகிகள் சந்தனகுமார்,  பார்த்திபன், மண்டல தொடர்பு பணியாளர் திட்டம், தொடர்பு பணியாளர்கள் கலாமணி,  நதியா, செல்வி. கீர்த்தனா, விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment