ஈரோடு மாவட்டம், ஆதித்தமிழர் பேரவை சார்பில் சத்தியமங்கலம் S.P.S.கார்னரில் இந்திய அரசியலமைப்பின் சட்ட மாமேதை பாபாசாகிப் Dr. அம்பேத்கர் அவர்களின் 66ம் ஆண்டு நினைவு நாளிள் புகைப்படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை நிமித்தம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பெ.பொன்னுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொ.குமுதா முன்னிலை வகித்தார் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் செ.வடிவேல், தமிழ் புலிகள் கட்சி மேற்கு மண்டல நிதி செயலாளர் ப.அப்துல்லா, புரட்சிகர இளைஞர் முன்னணி பாலு, கு.சேகர், ர.தங்கமணி, ப.ஸ்டார் சேகர், பொ. பாலசுப்பிரமணியன், ப.வெற்றிவேல், மகளிர் அணி நிர்வாகிகள் ம.கலைவாணி, ரா.சரோஜா, க.மல்லிகா, ர.நந்தினி ஆகியோர்கள் கலந்து கொண்டு இந்த நினைவு நாளில் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திற்கு புரட்சியாளர் Dr.அம்பேத்கர் அவர்களின் பெயரை சுற்ற வலியுறுத்துவோம் சனாதனத்தை வேரறுப்போம் சம தர்மத்தை படைத்திடுவோம் பாசிசத்திற்கு எதிராக போராட்ட களத்தில் களை எடுப்போம் என்று உறுதிமொழிகளாக எடுத்துக் கொண்டார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment