கோணமூலை ஊராட்சி, காந்தி நகர் பகுதியில் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 December 2022

கோணமூலை ஊராட்சி, காந்தி நகர் பகுதியில் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.


ஈரோடு மாவட்டம்,  பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம் கோணமூலை ஊராட்சி,  காந்தி நகர் பகுதியில்  புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு  பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும்,  அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்  அ.பண்ணாரி.பி.ஏ.,  மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.காளியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.டி.சரஸ்வதி,  சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.என்.சிவராஜ், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி,  பவானிசாகர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் டி.எஸ்.பழனிச்சாமி, ஊராட்சி கழக செயலாளர் காமு, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.பி.வெங்கிடுசாமி,  மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் வி.பி.தமிழ்செல்வி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கே.ஆர்.தேவராஜ் மற்றும் கோணமலை ஊராட்சி உட்பட்ட கழக நிர்வாகிகள் யுவராஜ் , மௌலீஸ்வரன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment