ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி பர்கூர் ஊராட்சியில் கிழக்கு மலை பகுதிகளான கடையீரட்டி பகுதியை சேர்ந்த மாதேஷ், ராமகிருஷ்ணன், சக்திவேல், கோபாலகிருஷ்ணன், மாதேவன், சுரேஷ் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

உடன் அந்தியூர் ஒன்றிய அவைத் தலைவர் புட்டன், முன்னாள் ஊராட்சி செயலாளர் ராமதாஸ், கடையீரட்டி கிளைச் செயலாளர் சௌந்தரராஜன், ராஜா முருகேசன் சிக்குபொம்மன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் என். நரசிம்மமூர்த்தி.

No comments:
Post a Comment