ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மாக்கினாங்கோம்பை ஊராட்சி, வெள்ளிமலைக்கரடு A.D காலனியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கை ஏற்று சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ நேரில் சென்று பார்வையிட்டார். உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உடன் மாக்கினாங்கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் திருமதி. தங்கமணி, திமுக நிர்வாகிகள் சகுந்தலா, விஸ்வநாதன், பூபதி, அசோகன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment