ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கொமாரபாளையத்தில், ரூ,11.70 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், ரூ,5.00 இலட்சம் மதிப்பிலான சமையலறை கட்டிடம், அங்கணகவுண்டன் புதுரில் ரூ,10.00, இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்று பண்ணை, ஆகிய பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர் சுமதி ஆய்வு செய்தார்.

உடன் கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியம், பிரேம்குமார், உதவி பொறியாளர்கள் சரவணன், ஜெயகாந்த், இளமுருகன், ஒன்றிய பணி பார்வையாளர் வெள்ளிங்கிரி, ஒன்றிய குழு உறுப்பினர் சத்யாபழனிசாமி, வளர்ச்சி உறுப்பினர் ராசு, ஊராட்சி செயலாளர் குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment