ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம், தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தனிடம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அந்தியூர் ஏரி, கெட்டி சமுத்திரம் ஏரி, ஆகிய பகுதிகளில், படகு இல்லம் அமைந்த தர வேண்டும், பர்கூர் ஊராட்சி தாமரைகரை குளத்தை மேம்படுத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் பேரில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் சம்மந்தப்பட்ட சுற்றுலா துறை அதிகாரிகளுடன் இரண்டாம் நிலை ஆய்வு மேற்கொண்டார்.

உடன் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை விடுதி மண்டல மேலாளர் வெங்கடேஷ் ஊட்டி படகுத் துறை மேலாளர் சாம்சன் மற்றும் ஈரோடு மாவட்ட சுற்றுலா துறை அலுவலர் மணி மற்றும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்ம மூர்த்தி.

No comments:
Post a Comment