ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்.ஐ.வி./எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 December 2022

ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்.ஐ.வி./எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம்.


உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் இன்று (01.12.2022) ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.சந்தோஷினி சந்திரா அவர்கள் எச்.ஐ.வி./எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டுவில்லையை ஆட்டோவில் ஒட்டி விழிப்புணர்வு பயணத்தினை துவக்கி வைத்தார். 

உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.என்.பொன்மணி இஆப., துணை இயக்குநர் (சுகாதார பணிகள் / மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர்) மரு.எஸ்.சோமசுந்தரம், துணை இயக்குநர்கள் மரு.ரவீந்திரன் (தொழுநோய்), மரு.கே.டி.கனகராஜ் (காசநோய்) உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர். 

No comments:

Post a Comment