ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 December 2022

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


ஈரோடு மாவட்ட காவல்துறையில் குற்றத்தடுப்பு, துப்பு துலக்குதல், தடைசெய்யப்பட்ட பொருள்கள் கடத்தல், பதுக்கல், விற்பனைக்கெதிரான நடவடிக்கைகள், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்களை  கைது செய்தல், கண்காணித்தல், நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நீதித்துறையுடன் இணைந்து செயல்படுதல் மற்றும் இதர சட்ட ஒழுங்கு நிலைநாட்டும் நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்கப்படுத்தவும், மற்றவர்களின்  செயல்திறனை மேம்படுத்தும் விதமாக ஈரோடு மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.சசிமோகன், I.P.S., அவர்கள், காவல்துறை நடவடிக்கைளில் சிறப்பாக பணிபுரிந்த 3 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 184- காவல் அதிகாரிகள்,  மற்றும் 4 ஊர்காவல் படையினருக்கு நற்பணி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கியும், மேலும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்து தெரிவித்து ஊக்குவித்தார். 

No comments:

Post a Comment