விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 December 2022

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் முன்பு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து,  மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 


இவ்விழாவில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்.தம்பிராஜன் தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ப.பெரியகாளையன் வரவேற்புரையாற்றினார். சத்தியமங்கலம் நகர செயலாளர் சிறுத்தை மூர்த்தி, விடுதலை,கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் வீர.துரைசாமி, கல்வி, பொருளாதார விழிப்புணர்வு இயக்கம் மாவட்ட அமைப்பாளர் அ.ரமேஷ்வளவன், பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்.சத்தியமூர்த்தி, மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட துணை செயலாளர் கலாமணி, சத்தியமங்கலம் நகர பொறுப்பாளர் சிறுத்தை சிவா, சத்தியமங்கலம் நகர ஒருங்கிணைப்பாளர் சிறுத்தை சுப்பிரமணியன், சத்தியமங்கலம் நகர துணை செயலாளர் தனுசுராஜ், நகர பொருளாளர் மனோஜ்குமார், பவானிசாகர் பேரூர் செயலாளர் கனகராஜ், சத்தியமங்கலம் ஒன்றிய துணை செயலாளர் சிறுத்தை மதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் இவ்விழாவில் வாழ்த்துரை வழங்கியவர்கள் மாவட்ட செயலாளர் பெ.சா.சிறுத்தை வள்ளுவன், முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், மாநில துணைப் பொதுச்செயலாளர் வெ.கனியமுதன், மண்டல அமைப்பு செயலாளர் பெரம்பலூர் இரா.கிட்டு, திருப்பூர் -பொள்ளச்சி மண்டல அமைப்பு செயலாளர் வளவன் வாசுதேவன், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பழ.சண்முகம், மாநில துணை செயலாளர் எஸ்.எம்.சாதிக், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ் வேந்தன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ப.சித்தார்த்தன், ஈரோடு வடக்கு மாவட்ட பொருளாளர் மிசா.தங்கவேல், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் விஜயபாலன், ஈரோடு கிழக்கு மாவட்ட இசுலாமிய சனநாயக மாவட்ட அமைப்பாளர் ஜாபர் அலி, கோவை வடக்கு மாவட்ட துணை செயலாளர் பாலுமகேந்திரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆம்னி துரை, நில உரிமை மீட்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் அ.சாமிநாதன், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் தம்பி முருகானந்தம், திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஏ.பி.ஆர்.மூர்த்தி, முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் செந்தமிழ் வளவன் மற்றும் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட துணை தலைவர் ஆனைகொம்பு ஸ்ரீராம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சத்தியமங்கலம் நகர தலைவர் ச.ம.சிவக்குமார், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பெ.பொன்னுசாமி, தமிழ் புலிகள் கட்சி மண்டல நிதி செயலாளர் ப.அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஸ்டாலினின் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜ், சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சத்தியமங்கலம் தெற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவராஜ் மற்றும் ஏராளமான பெண்கள், குழந்தைகள் விசிக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளார்கள். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி. 

No comments:

Post a Comment