சத்தியமங்கலம்: அரசு பள்ளி மாணவர்கள், மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 December 2022

சத்தியமங்கலம்: அரசு பள்ளி மாணவர்கள், மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,  சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல்  கல்லூரியில் அரசின் சார்பில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளி மாணவர்கள், மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சியில்  பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்  அ.பண்ணாரி.பி.ஏ., கலந்து கொண்டு மாணவ,  மாணவியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அறிவுரை வழங்கி விழாவினை சிறப்பித்து உரைநிகழ்த்தினார்.

விழாவில் கல்லூரியின் தாளாளர் பெருமாள்சாமி, கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார், கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், சதுமுகை ஊராட்சி மன்ற தலைவர் என்.என்.சத்யாசிவராஜ், பவானிசாகர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் ஏ.சோமசுந்தரம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.பி.வெங்கிடுசாமி, சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.எம்.எஸ்.நாச்சிமுத்து, புளியம்பட்டி நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி, மாவட்ட பாசறை துணைச் செயலாளர் கணேசன்  மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் எஸ்.டி.காமேஷ்,  ராஜேந்திரன்,  லோகநாதன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், மாணவர்கள்,  நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment