புனேவில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான துடுப்பு நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவி தங்கம் ரூபிணிக்கு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டும் அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திருமதி. கிருத்திகா சிவ்குமார் சார்பாக ஊக்கத்தொகையினை நன்கொடையாக வழங்கினார்.

தமிழகத்திலிருந்து 40 மாணவ, மாணவியர் புனேவில் வரும் 9,10,11 ம் தேதியில் நடக்கும் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். அதில் ஈரோடு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ அறிவியல் பிரிவு மாணவி தங்கம் ரூபினையும் ஒருவர். இவர் மாவட்ட, மாநில அளவில் நீச்சல் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவர்.
இந்நிகழ்வின் போது மாணவியின் பெற்றோர் பூபதி, கௌரி, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் ரஞ்சித் குமார், பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் சி.பி. சக்கரவர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment