ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள EKM அப்துல் கனி மதரஸா ஆரம்பப் பள்ளியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஐந்து வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளை ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E . திருமகன் ஈவெரா. திறந்து வைத்து பார்வையிட்டார்.
மேலும் பள்ளியைச் சேர்ந்த மாணவன் கீர்த்தி என்பவர் தேசிய அளவில் சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றமைக்கு பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர் இஸ்கந்தர், வட்டார கல்வி அலுவலர் சந்தியா, தாளாளர் முகமது தாஜ், பொருளாளர் ஹசன் அலி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முஹம்மது சாகுல் ஹமீது மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளும். மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர் விஜயபாஸ்கர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment