அரியப்பம்பாளையம் பேரூராட்சி அஇஅதிமுக சார்பில் சொத்து வரி உயர்வு மின் கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு விலைவாசி உயர்வை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 December 2022

அரியப்பம்பாளையம் பேரூராட்சி அஇஅதிமுக சார்பில் சொத்து வரி உயர்வு மின் கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு விலைவாசி உயர்வை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஈரோடு மாவட்டம்,  அரியப்பம்பாளையம்  பேரூராட்சி அஇஅதிமுக சார்பில் தமிழக அரசின் விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றின் வரி உயர்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக அவைத்தலைவர் பி.சிதம்பரம்  தலைமை தாங்கினார்.மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் தேவராஜ், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.என்.சிவராஜ், மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் அருள் முருகன், அரியப்பம்பாளையம் பேரூராட்சி கழக செயலாளர் பி.என்.தேவமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்தியமங்கலம் நகர செயலாளர் ஓ.எம்.சுப்பிரமணியம், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் எம்.பி.துரைசாமி, மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் கொத்துக் காடு வி.பி.பெரியசாமி, மாவட்ட பிரதிநிதி சோழா ஆர்.தனசேகர் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள்,  உறுப்பினர்கள்,  பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டுள்ளார்கள். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்   சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment