ஆர்ப்பாட்டத்திற்கு நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் தம்பி (எ) சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார். நம்பியூர் எலத்தூர் பேரூராட்சி செயலாளர்கள் கருப்பணன், சேரன் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நம்பியூர் ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் விஸ்வநாதன் கண்டன உரை நிகழ்த்தினார் அப்போது மக்களின் அத்தியாவசிய தேவைகளான பால் மின் கட்டணம் சொத்து வரி உள்ளிட்ட வரிகளை மிகவும் பல மடங்கு உயர்த்தி உள்ள திமுக அரசை கண்டித்தும் மற்றும் கடந்த ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களான மகளிர்க்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம், மடிக்கணினி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன அவைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிகண்ட மூர்த்தி, திருமூர்த்தி, சிவக்குமார், மகுடேஸ்வரன், உள்பட வார்டு உறுப்பினர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.


No comments:
Post a Comment