ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றிய தி.மு.க செயலாளர், பேரூராட்சி மன்ற தலைவர் மெடிக்கல். ப. செந்தில் குமார் தலைமையில் நம்பியூர் பேரூர் கழக செயலாளர் எஸ். பி. ஆனந்தகுமார் முன்னிலையில் திமுக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து நம்பியூர் ஒன்றிய தி.மு.கழக இளைஞர் அணியின் சார்பில், நம்பியூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, மதிய உணவு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, கழக கிளை கழக, சார்பு அணி, தொ.மு.ச, கழக உடன்பிறப்புக்கள், விவசாய பெருமக்கள், வியாபார பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர். தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.


No comments:
Post a Comment