வீட்டுமனை பட்டா வழங்க கோரி பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் அ.பண்ணாரி தலைமையில் வருவாய் வட்டாட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 December 2022

வீட்டுமனை பட்டா வழங்க கோரி பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் அ.பண்ணாரி தலைமையில் வருவாய் வட்டாட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சி குமரன்கரடு பகுதி பொதுமக்கள் சுமார் 100கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். அப்பகுதி பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வீட்டுமனை பட்டா வழங்க கோரி பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி .பி.ஏ.,  கோரிக்கை மனு அளித்தார்கள் உடனடியாக பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்  சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர்  இடம் நேரில்  அனைவரையும் அழைத்து சென்று அப்பகுதி பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் வட்டாட்சியரிடம் மனு அளித்தார்கள். 

உடனடியாக நடவடிக்கை எடுத்து விரைவில் பட்டா வழங்குவதாக வருவாய் வட்டாட்சியர்  உறுதியளித்தார். உடன் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சி.என்.மாரப்பன் , பவானிசாகர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஏ.பழனிசாமி, கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.பி.வெங்கிடுசாமி, மாவட்ட மகளிர் அணி தலைவர் ஏ.டி.சரஸ்வதி, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் வி.பி.தமிழ்செல்வி, கொமாரபாளையம் விவசாய சங்க தலைவர் இளங்கோ, ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பழனிச்சாமி, கொமாரபாளையம்  ஊராட்சி மன்ற துணை தலைவர் ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் விக்னேஸ்வரி,  சுப்பிரமணியம், வடிவேலு, ராசு (எ)சுப்பிரமணி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் வசந்தாமணி, வழக்கறிஞர் கே.எஸ்.வெற்றிவேல், சத்தியமங்கலம் பேரவை இணை செயலாளர் எஸ்.டி.காமேஷ் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள்  ராஜேந்திரன், மாணிக்கம் மற்றும் குமரன் கரடு பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நிகழ்வின்போது உடன் இருந்தனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment