சத்தியமங்கலம் நகர அஇஅதிமுக சார்பில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 December 2022

சத்தியமங்கலம் நகர அஇஅதிமுக சார்பில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதி, சத்தியமங்கலம் நகர  அஇஅதிமுக சார்பில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதி,  சத்தியமங்கலம் நகர  அஇஅதிமுக சார்பில் தமிழக அரசின் விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு  சீர்கேடு உள்ளிட்டவற்றால்  வாட்டி வதைக்கும் விடிய  திமுக அரசைக் கண்டித்தும் உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சத்தி பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி முன்னிலை வகித்தார். 


மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்தியமங்கலம் நகர செயலாளர் ஓ.எம்.சுப்பிரமணியம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.காளியப்பன், சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.என்.சிவராஜ் , சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் என்.எம்.எஸ்.நாச்சிமுத்து,  பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிசாமி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் டி.எஸ்.பழனிசாமி , அரியப்பம் பாளையம் பேரூராட்சி செயலாளர் பி.என்.தேவமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி.பிரபாகரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் தேவராஜ், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் எம்.பி.துரைசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் பி.ஆர்.துரைசாமி,  மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.பி.வெங்கிடுசாமி, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் வி.பி.தமிழ்செல்வி, கே.என்.பாளையம் பேரூராட்சி கழக செயலாளர் எஸ்.கே.நடராஜன், ஒன்றிய மாணவரணி துணை செயலாளரும், கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர்  எஸ்.எம்.சரவணன், சதுமுகை ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சிவராஜ்,  கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோ, மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் கொத்துக் காடு வி.பி.பெரியசாமி, மாவட்ட பிரதிநிதி சோழா ஆர்.தனசேகரன், சிவியார்பாளையம் கிளை செயலாளர் பி.சிவக்குமார் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள்,  உறுப்பினர்கள்,  பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டுள்ளார்கள். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி. 

No comments:

Post a Comment