ஈரோடு மாவட்டத்தில் இன்று (06/12/2022) சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அம்பேத்கார் அவர்களின் திருஉருவ சிலைக்கு ஈரோடு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் மாவட்ட தலைவர் செல்வராஜ் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலாளர் மயில் துரையன், சென்னிமலை ஒன்றிய தலைவர் அப்பார் ரங்கசாமி, கொடுமுடி ஒன்றிய தலைவர் சக்திவேல் பாண்டியன், மாநகர இளைஞரணி செயலாளர் சிவா பாண்டியன், பவானி ஒன்றிய செயலாளர் துரைசாமி, பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் ரஞ்சித், ஆகியோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

No comments:
Post a Comment