கொங்குநாடு வேட்டுவகவுண்டர் இளைஞர் நலசங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 December 2022

கொங்குநாடு வேட்டுவகவுண்டர் இளைஞர் நலசங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழா.


ஈரோடு மாவட்டம் புதிய திராவிட கழகம் மற்றும் கொங்குநாடு வேட்டுவகவுண்டர் இளைஞர் நலசங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழா மற்றும் ராஜ்கவுண்டரின் பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் தலைவர் பரதன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனதலைவர் திருமாறன், தொட்டியநாயக்கர் விடுதலைகளம் தலைவர் நாகராஜன், செங்குந்தர் அரசியல் அதிகாரம் தலைவர் சரவணவேல், அகில இந்திய சான்றோர் மக்கள் கழகம் தலைவர் சதா நாடார், தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனதலைவர் பொன் விஸ்வநாதன் நாடார், மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன் தமிழக வீரசைவ பேரவை மாநில இளைஞரணி தலைவர் தங்க தமிழ் செல்வன், பனங்காட்டுபடை கட்சி அமைப்பு செயலாளர் இரா. இமானுவேல், அனைவரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி அவர்கள் சார்ந்த சமுதாயத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொண்டு வரகூடிய காலங்களில் நாம் ஓரணியாக திரண்டு சமூகநீதியின் சமத்துவத்தையும் சமுதாய ஒற்றுமையையும் நிலைநாட்டுவோம் என தெரிவித்துக் கொள்கிறோம்.. மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கொங்கு சொந்தங்கள் பெரியோர்கள் தாய்மார்கள் கழக நிர்வாகிகள் இனமான இளைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


ஐம்பெரும் விழா மற்றும் ராஜ்கவுண்டரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த மொடக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அரச்சலூர் ஒன்றிய கழக செயலாளர் கொடிமுடி ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். 


- மாவட்ட செய்தியாளர் என். நரசிம்மமூர்த்தி.

No comments:

Post a Comment