ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஐஆர் டி டி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்டச் செயலாளர் பட்டக்காரன் சசிதயாள் தலைமையில், நிர்வாகிகளோடு நேரில் சென்று சந்தித்து அவர்களது கோரிக்கையை கேட்டு அறிந்ததோடு, அது தொடர்பாக தூய்மை பணியாளர்களின் அரசு ஒப்பந்ததாரர் கிறிஸ்டல் நிறுவனத்தைச் சார்ந்த மேளாளர் சுரேஷ் மற்றும் அரசு மருத்துவமனையின் ஆர் எம் ஓ ராணி அரசு மருத்துவமனையின் முதல்வர் மணியன் நேரில் சந்தித்து தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று அதை உடனடியாக சரி செய்து தருமாறு கூறினோம்.
அவர்கள் கூறிய கோரிக்கையை ஏற்று சிலவற்றை உடனடியாக சரி செய்து தருவதாக உறுதி அளித்தனர். கீழ்கண்ட நிபந்தனை மற்றும் கோரிக்கைகள் நிறைவேற்றதாக உறுதி அளித்தனர்
- ஆண் மற்றும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு தனித்தனியான ஓய்வுவரை மற்றும் கழிப்பிடம் தூய்மைப் பணியாளர்களுக்கான அறை என்று பெயர் பலகையோடு வழங்கப்படும் என உறுதித்தனார்.
- ஒப்பந்த தூய்மை பணியாளர்களில் 53 நபர்களை மருத்துவமனையில் பல்வேறு வேலைகளுக்கு பயன்படுத்தி வந்தனர், அவர்களை மீண்டும் தூய்மை பணிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 53 நபர்களில் முதல் கட்டமாக 15 நபர்களும், ஒரு மாத காலத்திற்குள் மீதி நபர்களையும் மாற்றுவதாக உறுதி அளித்தனர்.
- மாதத்துக்கு ஒரு முறை மாற்றி அமைத்த ஷிப்ட்டை, 10 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் சுழற்சி முறையில் வேலையை மாற்றி தருவதாகவும் உறுதி அளித்தனர்.
- மேலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உபயோகித்தனர்.
இது போன்ற கோரிக்கைகளை அரசு ஒப்பந்த நிர்வாகத்தினர் மற்றும் அரசு மருத்துவமனை முதல்வர் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததை போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்களிடம் தெரிவித்தோம்.
மேலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உறுதி அளித்தோம்.
இந்நிகழ்ச்சிக்கு பிரச்சார பிரிவு மாவட்ட துணைத் தலைவர் விஸ்வநாதன் ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் ரத்தினசாமி பெருந்துறை நகர மண்டல் பொதுச்செயலாளர் திரு மூர்த்தி, செயலாளர்கள் மோகன்ராஜ், மணிகண்டன் கலைக் கலாச்சார பிரிவு நகர ஒன்றிய தலைவர் சிவபிரகாஷ் செயலாளர் நல்லசிவம் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு பெருந்துறை தெற்கு ஒன்றிய தலைவர் ஜெயக்குமார் பட்டியல் அணி பெருந்துறை நகர தலைவர் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்ம மூர்த்தி.
No comments:
Post a Comment